சனி, 2 ஜனவரி, 2016

கணிதர் மஞ்சுள் பார்கவா - சில விஷயங்கள் - CHENNAI SANSKRIT COLLEGE - 02 JAN 206

 கணிதர் மஞ்சுள் பார்கவா - சில விஷயங்கள்
1. மொழி யின் ஒலி , உச்சரிப்பு விதிகள் - ஸ்மார்ட் போன் - சமஸ்க்ரிதம், கிரந்தம்
சமஸ்க்ருத (கிரந்தம், துளு) மொழிகள் மட்டுமே
ஒரு சொல் எப்படி உச்சரிக்கப் பட வேண்டும் என்று உச்சரிப்பு குறித்த விதிகளுடன் உருவாக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலம், தமிழ், அரபிக் , பிரெஞ்சு மலையாளம் ஆகிவயவற்றில் இந்த விதிகள் இல்லை. how are you என்ற வாக்கியம் லண்டனில் ஒரு சத்தத்திலும் , மணிலாவில் ஒரு சத்தத்திலும் , சென்னையில் ஒரு சத்தத்திலும் , லக்னோவில் ஒரு சத்தத்திலும் கேட்கப் படுகிறது, உச்சரிக்கப் படுகிறது. கம்முனுஇரு என்ற சொல்லும் சேலத்தில் ஒரு விதம், சென்னையில் ஒரு விதம்.
கேப் ஆலக் என்பதும் குவைத்தில் ஒரு விதம், துபாயில் ஒரு விதம், ஓமானில் ஒரு விதம்.
ஆனால் ருத்ரமோ, லலிதா சஹஸ்ரநாமமோ கலிபோர்னியா, கன்னியாகுமரி, க்வாலியர், மெல்போர்ன், அடையார் என எங்கும் ஒரே உச்சரிப்பில், ஒரே ஸ்வரத்தில் பேசப் படுகிறது.
2. கணினி வல்லுனர்களுக்கு சமஸ்க்ரிதம் மீது ஈர்ப்பு ஏன்
அடுத்த இரு ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் , டிவி ரிமோட் , மைக்ரோ ஓவன் ரிமோட் , பிரிட்ஜ் ரிமோட்டுடன் பேசத் துவங்க இருக்கிறது. பிராசசர்கள் ஒன்றுடன் ஒன்று தெளிவாக உரையாட உச்சரிப்பு விதிகள் மிக முக்கியம். எனவே மென்பொருள் வல்லுனர்கள், சமஸ்க்ரிதம் கற்க முயல்கிறார்கள். சமஸ்க்ரிதத்தில் எவ்வாறு உச்சரிப்பு விதிகள் சொற்களை உருவாக்கும் போதே இணைந்து உருவாக்கப் பட்டுள்ளதோ , அது போன்றே மென்பொருள் நிரல்கள் உருவாக்கும் போதே உச்சரிப்பு விதிகளுடன் உருவாக்கி விட்டால், ப்ராசசர்களின் உரையாடல் சிறப்பாக எளிதாக துல்லியமாக அமையும் .
3. ஜீரோ /பூஜ்யம் உலகிற்கு அளித்தோம்.
ஜீரோ வை (பூஜ்ஜியத்தை) இந்தியா தான் உலகிற்கு அளித்தோம். ஆனால் எபோது, எந்த வருடம் அளித்தோம் என்று நம்மிடம் பதிவு, ஆவணம் இல்லை. இந்தியாவில் இருந்து அரேபியா சென்று, அரேபியாவில் இருந்து ஐரோப் சென்று லண்டன் சென்று இன் அமேரிக்கா சென்றுள்ளது. இந்தச் செய்தி வாய் வழிச் செய்தி, நம்மிடம் எந்த ஆவணமும் இல்லை .
யாரேனும் ஜீரோ பயணத்தின் ஆவணம் அளித்தால், ஹார்வார்ட், பிரின்ஸ்டன் பல்கலை உரிய அங்கீகாரம் கொடுத்து அதை வரவேற்கத் தயாராக இருக்கிறது .
கிரந்தம் தான் சூன்யம்/ பூஜ்ஜியத்தை அளித்தது (சமஸ்க்ரிதம் அதன் பின்புதான் அளித்தது) என்று நாங்கள் சொன்னதை பார்கவாவும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் ஆவணம் வேண்டும் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக