சனி, 14 மே, 2011

மதுமிதா அவர்களின் - இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவுமும்

'அன்னா கரீனினாவை வாசித்த பின், அன்னாவின் வாழ்க்கை பெண்ணின் மன நிலையைப் புரிந்து கொள்ளச் செய்ததும், ஜெயகாந்தனின் 'பாரிசுக்குபோ'வுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவில் வாசிப்பினை அதிகரித்தது.

வெண்ணிற இரவுகளில் ஏழு இரவுகளும் உடன் நடந்து நீ ஏன் முதலில் வரவில்லை , உன்னை மணந்து இருப்பேனே என்னும் கேள்வி பல இரவுகள் விழிப்பினை ஏற்படுத்தியது.

பலி, பிரகாசமான விளக்குகளுடன் ஒரு அறை போன்ற சிறுகதைகள் இன்னொரு தளத்துக்குச் சென்று என்னை சிந்திக்க வைத்தன.

அழிவற்ற காதல், வால்காவிலிருந்து கங்கை வரை, தர்மானந்த கோசம்பியின் தத்துவ இயல்கள் ... என வாசிப்பு விரிய விரிய
புது உலகைக் காண்பதும், சந்திக்கும் மனிதர்களுடன் இன்னும் நேசமாய்ப் பூப்பதும் இயல்பாய் நிகழ்கிறது - மதுமிதா


இரவு பற்றி சமகால எழுத்தாளர்கள், பதிவர்கள் பலர் தங்கள் அனுபவங்களை, பார்வைகளை மிக அழகாக எழுதி இருக்கிறார்கள். பல்வேறு வித கட்டுரையாளர்களை ஒருங்கே இணைத்து ஒரு அற்புதமான படைப்பைத் தந்து உள்ள எழுத்தாளர் மதுமிதா அவர்களுக்கும் சந்தியா பதிப்பகம் மற்றும் குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

படைப்பை அளித்துள்ள கட்டுரையாளர்கள்- கலா ப்ரியா, தமிழ்நதி, ரிஷான் ஷெரிப், நாஞ்சில் நாடன், மதுமிதா , பாஸ்கர் சக்தி, எ முத்துலிங்கம், யுகமாயினி சித்தன், உமா ஷக்தி, கவின் மலர், லதா ராமகிருஷ்ணன், அசோக மித்திரன், ந தேவி, கோ மா கோதண்டம், வைதீஸ்வரன், க மோகன ரங்கன், தி சுபாஷினி , ச விஜய லட்சுமி , ராஜ்ஜா , இந்திரா பார்த்தசாரதி, பாவண்ணன், சக்திஜோதி, நரசய்யா, இளம்பிறை, எஸ் ஷங்கர நாராயணன், இரா முருகன், அரங்க மல்லிகா, தமிழ்மகன், பூ அ இரவீந்திரன், ஜெயந்தி சங்கர், ஆல்பர்ட்,சேவியர், ராமச்சந்திரன் உஷா, நாகரத்தினம் கிருஷ்ணா, தமிழ்ச்செல்வன், அண்ணாமலை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்
0091 44 24896979
www.sandhyapublications.com

எனக்கு தோன்றும் ஒரே குறை- பெரும்பாலான கட்டுரைகள் சோக நிகழ்வுகளையே அடக்கி இருக்கின்றன. இதே இரவு குறித்து எ ஆர் ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ், சின்மயி எழுதி இருந்தால் மகிழ்ச்சி கலந்த அனுபவங்களை எழுதி இருப்பர் என எண்ணுகிறேன்.
ஸ்ரீனிவாஸ் சொன்னார் கிழக்கு சீமையிலே , உயிரே பாடல் பதிவுகள் இரவுகளில் நடந்தன. அளவிலா இன்பம் நிறைந்த இரவுகள் அவை என்றார். அதில் எப்படி சந்தேகம் வரும் நமக்கு.

எழுத்தாளர் மதுமிதா அவர்களின் காலம் பற்றிய புத்தகம் இன்று வாசித்து முடித்து விடுவேன். அது பற்றி அடுத்த பதிவு இட ஆவலாக உள்ளேன்

செவ்வாய், 3 மே, 2011

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுடன்


உயிர்மை சுஜாதா விருது விழாவில், எனது அபிமான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுடன் (03 May 2011)

நன்றி- பட உதவி- பதிவர் கிருஷ்ணா பிரபு

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் இன்று ஒரு இலக்கியத் திருவிழா நடந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.

பதிவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அகநாழிகை வாசுதேவன், மணிஜி, உமா ஷக்தி, மதுமிதா ராஜா, கிருஷ்ணா பிரபு, அதியமான், வெங்கட், ப்ரியா ராஜ், அழகிய பெரியவன், இந்திரா பார்த்தசாரதி, எறும்பு ராஜகோபால், மர்.டின் அதிஷா, யுவ கிருஷ்ணா, விஜய் மகேந்திரன், மனுஷ்ய புத்திரன், சந்தியா பதிப்பகம் ராஜகோபால், எஸ் ராமகிருஷ்ணன், வண்ணதாசன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன்


உயிர்மை சுஜாதா விருது விழாவில், எனது அபிமான எங்கள் ஊர் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன் (03 May 2011)

நன்றி- பட உதவி- பதிவர் கிருஷ்ணா பிரபு

அவருக்கு சுஜாதா உயிர்மை விருது கிடைத்தமைக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்.