வெள்ளி, 21 ஜனவரி, 2011

வாசித்தலுக்கு எஸ் ராமகிருஷ்ணன் அளிக்கும் அறிவுரைகள்.

வருடத்திற்கு / மாதத்திற்கு/வாரத்திற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை என பட்டியல் இட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப கால வாசகர்கள், வருடத்திற்கு இருபது புத்தகங்கள் (குறைந்த பட்சம்) படித்தாலே , வாசித்தலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
(எஸ் ரா - வாரத்திற்கு ஐம்பது முதல் அறுபது புத்தகங்களை வாசித்து வருகிறார்)

புத்தகம் வாசித்தல் நம் மனதை, எண்ணங்களை, நம் பார்வையை விரிவு படுத்தும். நம் எண்ணங்கள் விசாலம் அடையும். நம்மிடம் உள்ள அழுக்கு
நிறைந்த எண்ணங்களை வாசித்தல் வெளியேற்றி விடும்.
நமது ஆளுமையை மேம்படுத்தும், பிற மனிதர்களுடன்
பழகுவதற்கு வாசித்தல் உதவி புரியும். எந்த வித இக்கட்டான சூழ்நிலையும் சந்திக்கும் நம்பிக்கையை வாசித்தல் நமக்கு அளிக்கும்.

சமீபத்திய புத்தக கண்காட்சியில் நிறைய வாசகர்கள் புத்தகம் வாங்கி யுள்ளனர். அவர்கள் அனைவரும் அதை முழுதும் வாசித்து முடிக்க வேண்டும். வாசித்த படி நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

வாசித்து முடித்த புத்தகங்களை வீட்டில் வைக்க இடம் இல்லாததால், அவர் பல புத்தகங்களை நண்பர்களுக்கு, நூலகங்களுக்கு, கிராமப் புற பள்ளிகளுக்கு கொடுத்து விடுகிறாராம். இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்ற தொடங்கலாம்.

சென்னை கன்னிமரா உணவகம் உள்புறம் (அருகில்) ஒரு பெண்மணி வைத்து இருக்கும் புத்தக கடை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பெண்மணி (உரிமையாளர்) அந்தக் கடையில் உள்ள எல்லா புத்தகங்கள் பற்றியும் விளக்கம் அழைப்பர், அதனுடன் தொடர்பு உடைய புத்தகங்கள் குறித்தும் தகவல் அளிப்பார்.


அபிதாம சிந்தாமணி புத்தகம் உருவாகிய காலத்தில் தட்ட்டச்சு, கணினி வசதிகள் கிடையாது. அந்த கால கட்டத்தில் ஒரு ஆசிரியர் பென்சிலின் உதவியால் முப்பதாயிரதிர்க்கும் மேலாக புதிய தமிழ் சொற்களை அந்த நூலில் அறிமுகம் செய்துள்ள ஒரு அறிய, பாராட்டுதலுக்கு உரிய புத்தகம் அது. அதிலும் குறிப்பாக அறிவியல் குறித்த தகவல்கள், சொற்கள் ஏராளம். எனவே தான் , தான் அந்த நூலிற்கு வாசிப்பதில் முதல் இடம்/முன்னுரிமை அளித்ததாக அவர் கூறியது, மிகவும் பொருத்தமே.


நேற்று எஸ் ராமகிருஷ்ணன் பங்கு பெற்ற ஆண்டான் செகா விழாவில் , விழா துவங்கும் முன்பு அவர் கூறிய கருத்துக்கள் இவை..