புதன், 22 டிசம்பர், 2010

வண்ணதாசனின் ஒளியிலே தெரிவது

வெளியீடு- சந்தியா பதிப்பகம் சென்னை . 0091 44 24896979
கிடைக்குமிடம்-நியு புக் லேன்ட் தி நகர்
0091 44 28158171, 28156006
விலை- ரூ- 100 . http://www.sandhyapublications.com/

மிக அற்புதமான பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். சிநேகிதிகள், இமயமலையும் அரபிக்கடலும், சில ராஜா ராணி கப்பல்கள், யாரும் இழுக்காமல் தான (நெல்லை தேர், நெல்லைஅப்பர் கோயில் தேர் அல்ல)), ஒரு கூழாங்கல், சுலோச்சனா அதை, ஜெகதா, காணாமல் போகும் வாய்க்கால்கள், ஒரு போதும் தேயாத பென்சில், ஒளியிலே தெரிவது, இன்னொன்றும், துரு, மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை.

உயிரெழுத்து, சிக்கிமுக்கி, திரிசக்தி போன்ற இனைய இதழ்களில் வந்த சிறுகதைகள் இவை.

எனக்கு பிடித்த சில வரிகள் (நெல்லை, பாளை சார்ந்த வாசகர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பிடிக்கும், வட்டார மொழியில், வட்டார பழக்க வழக்கங்களை அருமையாக எழுதி உள்ளார் வண்ண தாசன்).


ஆண்களின் சட்டை அணிந்த கட்டிடத் தொழிலாளிப் பெண்களுக்கும் சைக்கிள் தேநீர்க்காரருக்கும் நடக்கும் வெளிப்படையான உரையாடலை உறிஞ்சிய ஈரத்துடன்தான், எதிர் வீட்டுச் செங்கல் கட்டுமானம் வளர்கிறது.

இருபத்து நான்கு தசரா சப்பரம் இன்றைக்கும் பாளை மார்க்கட்டில் கூடியிருக்கிறது.

விடியக் கருக்கலில் பூத்தான் முக்கில், இன்னும் அரைக்கீரை, முளைக்கீரை, தன்டங்க்கீரை விற்றுகும் சத்தம் கேட்கிறது.

எப்போதும் தாடி வைத்திருக்கிற கூரியர் முத்துக்குமார், ' என்ன சார் தாடி
வளக்கறீங்க உடம்புக்கு சுவமில்லையா ? என்று அக்கறையுடன் கேட்பது இன்னும் அருகிப் போய்விடவில்லை.
திருச்செந்தூர் ரயில் இன்னும் போய்க் கொண்டுதான் இருக்கிறது.




நாற்பது வருடம் கழித்து பார்க்கும் நாச்சியார் பற்றிய வரிகள்.

அடப்பாவி, எப்படி இருப்பாள் ஒரு காலத்தில் தெருவே அல்லவா அவளால் குலுங்கிக் கிடந்தது.
(டவுன் , அம்பிகா காபி அம்பிகாவிர்க்காக தெற்கு ரத வீதி முதல் பாளை பஸ் ஸ்டாண்ட்,
அரசு பொறியியல் கல்லூரி வரை குலுங்கி கிடந்ததயும் கண் முன்னே கொண்டு வந்த வரிகள்)

பீடி பிடித்தாலும் ஒரு தேங்காய் சிரட்டையை பக்கத்தில் வைத்துக் கொள்வார். (சரஸ்வதி லாட்ஜில் பாரா, பொதுக்குழு உறுப்பினர், பரமசிவம், அண்ணாச்சி ஆவுடைஅப்பன்(சபாநாயகர்), பாம்புகரிட்டிணன், சுப்புரதனம், நம்பி போன்றோர் கூடி இருந்த அறையில் இருக்கும் சிரட்டை ஞாபகம் வந்தது).


கல்லூரிகளுக்கு இந்த மாதிரி
ஆர்ச்சு வைத்து கட்ட வேண்ட வேண்டும் என்று முதலில் யார் தீர்மானித்தார்களோ. (புனித சவேரியார், வளனார் கல்லூரிகள்)

எப்படி இந்தக் கல்லத்தி முடுக்கு தெருவுக்குள் இருந்து கொண்டே அம்மா எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறாளோ.


நான் கற்ற விஷயம் : கிடைத்த பொழுதை/சூழலை/நுணுக்கங்களை/வாழ்க்கையை/சொந்தங்களை ரசிக்க வேண்டும், இன்புற வேண்டும். இன்பம் எப்போதும் இருக்கும் . அது இல்லையே இது இல்லையே என்று புலம்பல் கூடாது.



ஓரத்தில் முளைத்துக் கிடந்த
எருக்கலம் பூவை விட உலகத்தில் அழகாக கருநீலம் இருக்க முடியாது என்று தோன்றியது.
இதே ரீதியில் நாம் சொல்வதானால் வண்ணதாசனின் எழுத்தில் வாழும் நெல்லை நகர ரத வீதிகளை விட லண்டன் பிகால்டி தெரு, டைம்ஸ் ஸ்கொயர் 42 ஆம் தெரு, துபாய் ஷேக் சைய்யது தெரு, மாம்பலம் பிருந்தாவன் தெரு ஆகிய தெருக்கள் அழகாய் இருக்க முடியாது என்பதே உண்மை.