சனி, 11 செப்டம்பர், 2010

நகுலன் வீடு- மேலும் சில படங்கள்






நகுலன் வீடு, எடுத்த மேலும் சில படங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நகுலனின் வீடு- TIRUVANANDHAPURAM





நன்றிகள்- எஸ் ராமகிருஷ்ணன் - சம கால தமிழ் எழுத்தாளர்

மூன்று வருடங்களுக்கு முன்பு எஸ் ராமக்ரிஷ்ணனின் நகுலன் கட்டுரை படித்த உடனேயே நகுலன் வீட்டிற்க்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அந்த ஆசை நேற்று நிறைவேறியது.

புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு;


திருவனந்தபுரம மாநகரத்தில் கௌடியார் என்ற பகுதிக்கு செல்லவும். அங்கே கோல்ப் கிரௌண்ட், கௌடியார் பாலஸ் கார்டன் என்று கேட்டால் சொல்லுவார்கள். கோல்ப் கிரௌண்ட் அருகில் (அடுத்த தெருவில்) அமைந்து உள்ளது நகுலன் அவர்களின் வீடு. நான் போய் இருந்த பொழுது வீடு பூட்டியே இருந்தது, யாரும் வசிப்பதில்லை அங்கே இப்போது.

நன்றி லேகா- லேகாவின் (யாழிசை ஒரு இலக்கிய பயணம்) அப்படியே வரிகளை காப்பி அடிக்கிறேன் இங்கே:

கதைகளில் வாசித்து,காட்சிபடுத்தியிருந்த இடங்களை நேரில் தேடி சென்றது.. வாசிப்புதேடல் ஒரு வகை சுவாரஸ்யம் என்றால் இது ஒருவகை,சொல்ல தெரியவில்லை.அதிகப்படியான கிறுக்காய் கூட தோன்றலாம்..

தெருவை கண்டுகொண்டதும் சிறு பிள்ளைக்கான உற்சாகம் தோன்றி என்னுள்ளே இருந்தது.

எதுவுமே செய்யாமல், எந்த சிந்தனையும் இல்லாமல் அவர் வீடு வாசலில், அந்த சாலையிலேயே ஒரு மணி நேரம் நின்று கொண்டு இருந்தேன்.

அவர் வீடு பற்றிய தகவல்கள் அளித்த ஜ்யோவ்ராம் சுந்தர், மாமல்லன், கவிஞர் சுகுமாரன், கூட வந்த சாந்தாராம் கேரளா காவல் துறைஆகியோருக்கு நன்றிகள்

அந்த பகுதியில் உள்ளவர்களிடம், மறைந்த ஆங்கிலப் பேராசிரியர் துரைசுவாமி வீடு எது என்று கேட்டால் சொல்லுவார்கள்