வருடத்திற்கு / மாதத்திற்கு/வாரத்திற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை என பட்டியல் இட்டுக் கொள்ளுங்கள்.
ஆரம்ப கால வாசகர்கள், வருடத்திற்கு இருபது புத்தகங்கள் (குறைந்த பட்சம்) படித்தாலே , வாசித்தலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
(எஸ் ரா - வாரத்திற்கு ஐம்பது முதல் அறுபது புத்தகங்களை வாசித்து வருகிறார்)
புத்தகம் வாசித்தல் நம் மனதை, எண்ணங்களை, நம் பார்வையை விரிவு படுத்தும். நம் எண்ணங்கள் விசாலம் அடையும். நம்மிடம் உள்ள அழுக்கு
நிறைந்த எண்ணங்களை வாசித்தல் வெளியேற்றி விடும்.
நமது ஆளுமையை மேம்படுத்தும், பிற மனிதர்களுடன்
பழகுவதற்கு வாசித்தல் உதவி புரியும். எந்த வித இக்கட்டான சூழ்நிலையும் சந்திக்கும் நம்பிக்கையை வாசித்தல் நமக்கு அளிக்கும்.
சமீபத்திய புத்தக கண்காட்சியில் நிறைய வாசகர்கள் புத்தகம் வாங்கி யுள்ளனர். அவர்கள் அனைவரும் அதை முழுதும் வாசித்து முடிக்க வேண்டும். வாசித்த படி நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
வாசித்து முடித்த புத்தகங்களை வீட்டில் வைக்க இடம் இல்லாததால், அவர் பல புத்தகங்களை நண்பர்களுக்கு, நூலகங்களுக்கு, கிராமப் புற பள்ளிகளுக்கு கொடுத்து விடுகிறாராம். இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்ற தொடங்கலாம்.
சென்னை கன்னிமரா உணவகம் உள்புறம் (அருகில்) ஒரு பெண்மணி வைத்து இருக்கும் புத்தக கடை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பெண்மணி (உரிமையாளர்) அந்தக் கடையில் உள்ள எல்லா புத்தகங்கள் பற்றியும் விளக்கம் அழைப்பர், அதனுடன் தொடர்பு உடைய புத்தகங்கள் குறித்தும் தகவல் அளிப்பார்.
அபிதாம சிந்தாமணி புத்தகம் உருவாகிய காலத்தில் தட்ட்டச்சு, கணினி வசதிகள் கிடையாது. அந்த கால கட்டத்தில் ஒரு ஆசிரியர் பென்சிலின் உதவியால் முப்பதாயிரதிர்க்கும் மேலாக புதிய தமிழ் சொற்களை அந்த நூலில் அறிமுகம் செய்துள்ள ஒரு அறிய, பாராட்டுதலுக்கு உரிய புத்தகம் அது. அதிலும் குறிப்பாக அறிவியல் குறித்த தகவல்கள், சொற்கள் ஏராளம். எனவே தான் , தான் அந்த நூலிற்கு வாசிப்பதில் முதல் இடம்/முன்னுரிமை அளித்ததாக அவர் கூறியது, மிகவும் பொருத்தமே.
நேற்று எஸ் ராமகிருஷ்ணன் பங்கு பெற்ற ஆண்டான் செகா விழாவில் , விழா துவங்கும் முன்பு அவர் கூறிய கருத்துக்கள் இவை..
அன்பு ராம்ஜி
பதிலளிநீக்குஉங்கள் மடலுக்கு நன்றி
உங்கள் பதிவில் சில தகவல் பிழைகள் உள்ளன
அதைத் திருத்தம் செய்து விடுங்கள்
நான் ஒரு மாதத்திற்கு நாற்பது ஐம்பது புத்தகங்கள் படிக்கிறேன் வாரத்திற்கு அல்ல
அது போல சென்னை காயித்தே மில்லத் கல்லூரி எதிரில் உள்ள கன்னிமாரா ஹோட்டலின் உள்ளே
கிக்கில்ஸ் என்ற புத்தகக் கடை உள்ளது அதை தான் நான் குறிப்பிட்டேன் உணவகத்தை அல்ல
அபிதாம சிந்தாமணி என்பது ஒரு கலைக்களஞசியம் அதை தொகுத்து உருவாக்கியவர் சிங்காரவேலு முதலியார்
அவர் தனது குறிப்புகள் முழுவதையும் பென்சிலால் எழுதி தொகுத்திருக்கிறார் தனிமனித உழைப்பில் இது ஒரு அபாரம்
அதை வாசிக்க சொல்வதற்கான காரணம் தொன்மம் புராணம் இதிகாசம் இலக்கியம் விஞ்ஞானம் வரலாறு என்று பல்தரப்பு சார்ந்து நுண்மையாக எழுதப்பட்டிருக்கிறது
நாவலைப்போல அதை கிடுகிடுவென வாசிக்க முடியாது என்று எனக்கே தெரியும்
ஆனால் அது ஒரு மிகச்சிறந்த குறிப்புதவிப் புத்தகம் என்பதால் அதை பயன்படுத்த வேண்டும் என்கிறேன்
மிக்க அன்புடன்
எஸ்ரா
\\வாசித்த படி நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்//
பதிலளிநீக்குதேகம் படித்தேன் .. அதன் படி நடக்கட்டுமா !!! ஹி ஹி ஹி .. ஒரு டவுட் பாஸ்
அருமையா இருக்குது....
பதிலளிநீக்குA Good Blog, Sir.
பதிலளிநீக்குI used to donate the 'read' books to Libraries or deserving readers.
Thanks.
மிக அருமை ராம்ஜி.. எஸ் ராவின் கருத்துக்களும்..:))
பதிலளிநீக்குநல்ல பகிர்வுக்கு நன்றி ராம்ஜி!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு....
பதிலளிநீக்குஎஸ்.ரா பேச்சை கேட்பதே ஒரு தனி அனுபவம் தான்....
தற்போது புத்தகத்தை படிக்கும் பழக்கம் வெகுவாக குறையம் இந்த சூழலில் இது போன்ற பதிவுகள் அவசியம்
பதிலளிநீக்குஇதையும் கொஞ்சம் படிச்சிட்டு கருத்து சொல்லு தலைவா
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
புத்தகங்கள் படிக்கத் தூண்டியது உங்கள் பதிவு. எஸ்ரா வின் கடிதத்தை இணைத்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குஐரோப்பிய நாடுகளில் படித்த புத்தகத்தை வீட்டின் வெளியே வைத்து விடுவார்கள். யார் வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். புத்தகப் பதிவிற்கு நன்றி
பதிலளிநீக்குநல்ல பகிர்வு ராம்ஜி.
பதிலளிநீக்குடோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?
பதிலளிநீக்குhttp://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html
புத்தகங்கள் னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது..
பதிலளிநீக்குவருடத்திற்கு ஐம்பது நல்ல புத்தகங்கள் வாசித்துவிடுகிறேன். ஒவ்வொரு எழுத்தாளரின் எல்லாப்புத்தகங்களையும் வாசித்துவிட ஆசையாய் இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்கு