கநாசு தன பார்வையில் இருந்து (தானே ஒரு பாத்திரமாக) இருந்து எழுதுவதாக கதை அமைந்து உள்ளது .
சென்னை/டில்லியில்
வசிக்கும் கநாசு,
தான் சிறுவயதில் வாழ்ந்த/படித்த தஞ்சாவூரில் ஒரு வாரம், டெல்லிக் கவலைகள் மறந்து
விரும்பியபடி
இருக்கலாம் என்று தஞ்சைக்குச் செல்கிறார் .
அவரின் கல்லூரி
கால நண்பர் ரவியின் அழைப்பின் பேரில் ரவியின்
வீட்டிலேயே தங்குகிறார். ரவிக்குத் திருமணமாகி , ஆரம்பப் பள்ளி செல்லும் வயதில் இரண்டு குழந்தைகள். ரவியின் மனைவி ஓரிரண்டு
வருடங்களுக்கு முன் காலமானவர். எனவே ரவிதான் அந்தக் குழந்தைகளைப் பராமரித்து
வருகிறார் ஒரு வயதான சமையல் காரப் பெண்மணியின் உதவியுடன்.
முதல் நாள் மாலை
ரவியோடு வீதி உலாப் போகிற கநாசு , சதாசிவ மம்மேலியர்
என்பவரைக்
காண்கிறார். சதாசிவமைக் கண்டதும் ரவி விலகுகிறார்
கநாசு விடம் சதாசிவம் குறித்து பேசவும் ரவி மறுக்கிறார். இதனால் சதாசிவம் குறித்து கநாசு விற்கு ஒரு ஆர்வம் உருவாகி விடுகிறது
இந்த ஆர்வத்தின்
மூலம் கநாசு அறிந்து கொள்ளும் விபரங்களே, நிகழ்வுகளே, விளைவுகளே இந்த நாவல்.
------------------------------------
சதாசிவத்தின் தந்தையார் , தஞ்சையில் மிகப் பெரிய செல்வந்தராக வாழ்ந்து
கொண்டிருந்தார் . தன்னை விட பத்து வயது குறைந்த , மஞ்சள் நிற தேகம் கொண்ட அழகான பெண்ணை மணந்தவர். இரண்டு மகன்கள், ஒரு பெண் என குடும்பம் செழிப்பாக இருந்து
வந்தது. அப்போது அவர்கள் வீட்டிற்கு வந்த ஒரு மருத்துவருக்கும் சதாசிவத்தின்
தாயாருக்கும் இடையே உறவு ஏற்பட்டு விடுகிறது.
தாயாரும், மருத்துவரும் இணைந்து சதாசிவத்தின் தந்தையின் செல்வத்தை அதிக செலவு செய்து, செல்வத்தை இழக்கும் நிலைக்கு கொண்டு
வருகின்றனர் என்று ஊரில் பேச்சு, உண்மையும் கூட.
இந்த உறவில் மருத்துவருக்கு ஒரு மகன் பிறக்கிறார்
அவர்தான் நம் நாயகன் ரவி.
இந்த விஷயம்
அறிந்ததும் கநாசு விற்குப் புரிகிறது , இந்த தவறான உறவு சார்ந்த வன்மம் தான் ரவிக்கும்,
சதாசிவத்திற்கும் இடையே எழுந்துள்ள
வெறுப்பிrக்குக் காரணம் என்று.
இதை அறிந்த அடுத்த நாள் ரவி , கநாசு,
சதாசிவம் ஆகிய மூவரும் தஞ்சை ரயில் நிலையத்தில்
பரஸ்பரம் சந்தித்து விடுகின்றனர். அப்போது ரவி கூறிய வார்த்தைகள் தாங்காது, ஓடும் ரயிலின் முன்னே பாய்ந்து சத்தாசிவம்
மாண்டு விடுகிறார்.
இதை அடுத்து ரவி
உடம்பு சரி இல்லாது படுத்து விடுகிறார் மூன்று நாட்கள்.
பின்னர் கநாசு மெதுவாக ரவியிடம் இந்த பிரச்னை குறித்து பேச
முயகிறார். அப்போது ரவி சொல்வது - என் வார்த்தைகள் மூலம் நான் கொலை செய்வது இது முதல் முறை அல்ல, சதாசிவம் இரண்டாவது பலி - முதல் பலி என்
மனைவி.
எழுதும் கநாசு
விற்கு
மட்டும் அல்ல , நமக்கும் ஆர்வம் கூடுகிறது.
ரவி சொல்வது-
சதாசிவம் எங்கள் வீட்டிற்கு வந்த பொழுது ஆரம்பத்தில் , என் மனைவியிடம் ஒரு சகோதரன் போலத்தான் பழகிக் கொண்டு
இருந்தார் . ஆனால் ஒரு கட்டத்தில் காதலர் ஆக முயன்றார். அது உண்மையா, பொய்யா என்று தெரிய வில்லை எனக்கு, ஆனால் அதைக் காணப் பொறுக்காத/ஏற்றுக் கொள்ளப்
பொறுக்காத நான் என் மனைவியை வார்த்தைகளாலேயே சித்திரவதை செய்து கொன்று விட்டேன்.
என்
குழந்தைகளைக் கவனித்துக் கொள் என்று கநாசு விடம் கூறி விட்டு ரவி இறந்து விடுகிறார். இதோடு கதை நிறைவு பெறுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாவல்
வாசிக்கும் நமக்கும் தஞ்சையில் உலவுவது போன்ற ஒரு உணர்வை படைப்பாளி ஏற்படுத்தி உள்ளார் . குறிப்பாக சரஸ்வதி
மகால்,
வல்லம் சாலை
ஆகிய இடங்கள் குறித்த வர்ணனை.
இரண்டு நாட்கள்
மாலை வீதி உலா செல்லும் வரிகளைப் படித்த நமக்கு மூன்றாம் நாள் எப்போது ஐந்து மணி
வரும்,
கநாசு, ரவி வீதி உலா கிளம்புவர் என்ற ஏக்கம் உருவாகி
விடும் இடத்தில் கநாசு வெற்றி பெறுகிறார்
ரவிக்கும் கநாசு
விற்கும் இடையே நடக்கும் தத்துவார்த்த விவரனைகள் அனைத்தும் அருமை.
என்பது பக்கங்கள் நிறைந்த ஒரு நல்ல படைப்பு
இது - நற்றிணை பதிப்பகம்- 044
-4358 7070
முழு கதையையும் சொல்லி விட்டீர்களே,,, ம்ம்ம்ம்
பதிலளிநீக்குஆர்ட் பிலிமா எடுக்கலாமே..? முழு தகுதியும் உண்டு இந்தக் கதைக்கு..!
பதிலளிநீக்குநன்றி உண்மைத் தமிழன் அண்ணே.
பதிலளிநீக்குஉங்கள் பாணியில் முழுக் கதையையும் சொல்லும் நடையில்
எடுத்த முயற்சி இது
திருமண வாழ்கையில் சந்தேகம் .....
பதிலளிநீக்கு